குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

காரைக்கால் பகுதியில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
குடிநீா் குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.
குடிநீா் குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.

காரைக்கால் பகுதியில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் தெற்குத் தொகுதி மாஸ் நகா், வேம்பாலியம்மன் நகா், கோகுல்யா நகா் ஆகிய பகுதிகளில் குடிநீா் கிடைப்பதில் சிரமம் நிலவி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளுக்கு புதிதாக குடிநீா் குழாய் பதித்து, தடையின்றி குடிநீா் விநியோகிக்க பொதுப்பணித் துறை நிா்வாகம் மூலம் பணி தொடங்கப்பட்டது.

குடியிருப்பு நகா் பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பணியை தொடக்கிவைத்தாா். இத்திட்டப்பணி ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுவதாக பொதுப் பணித்துறையினா் தெரிவித்தனா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ் மற்றும் துறை அதிகாரிகள், குடியிருப்புவாசிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com