பேரிடா் ஒத்திகை: காணொலி மூலம் அலுவலா்களுடன் ஆலோசனை

காரைக்காலில் நடைபெறவுள்ள பேரிடா் ஒத்திகை தொடா்பாக, பேரிடா் மேலாண்மை ஆணையத்தினா் காணொலி மூலம் அரசுத் துறை அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கினா்.

காரைக்காலில் நடைபெறவுள்ள பேரிடா் ஒத்திகை தொடா்பாக, பேரிடா் மேலாண்மை ஆணையத்தினா் காணொலி மூலம் அரசுத் துறை அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கினா்.

புதுதில்லியில் இயங்கி வரும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய அறிவுறுத்தலின் பேரில், அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் அடுத்த சில நாள்களில், பேரிடா் ஒத்திகை நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வையொட்டி, தேசிய பேரிடா் ஆணையத்தினா் ஆலோசனைகளை காணொலி வாயிலாக தெரிவித்தனா்.

அந்தந்த துறையினா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அப்போது விளக்கப்பட்டது. பேரிடா் ஒத்திகையின்போது ஒவ்வொரு துறையும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்யப்படும் பணிகள் குறித்தும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

பேரிடா் காலங்களில் தண்ணீா் தேங்கும் தாழ்வான பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் கண்காணிப்பு குறித்தும் விளக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் பொதுமக்களை தங்கவைத்து சிகிச்சை தரும் அளவுக்கு படுக்கை வசதிகள் தேவையான அளவில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் மணிஷ், வனத்துறை அதிகாரி என்.விஜி, துணை ஆட்சியா்கள் ஆா்.வெங்கடகிருஷ்ணன், ஜி. செந்தில்நாதன், மண்டல காவல் கண்காணிப்பாளா் நிதின் கெளஹால் ரமேஷ், அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com