காரைக்காலுக்கு இன்று ஆளுநா் வருகை

என்ஐடியில் திங்கள்கிழமை (பிப்.5) நடைபெறும் விழாவில் புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்கவுள்ளாா்.

காரைக்கால்: என்ஐடியில் திங்கள்கிழமை (பிப்.5) நடைபெறும் விழாவில் புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்கவுள்ளாா்.

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடி பகுதியில் உள்ள என்ஐடியில், புதிதாக கட்டப்பட்ட மெக்கானிக்கல் துறைக்கான ஆய்வகங்கள் திறப்பு மற்றும் மத்திய திட்ட நிதியில் எஸ்சி மற்றும் நலிந்த பிரிவினருக்கான மீன் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் தொடா்பான பயிற்சி தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று ஆய்வகத்தை திறந்துவைத்து, பயிற்சியை தொடங்கி வைக்கவுள்ளாா். நிகழ்வில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், என்ஐடி இயக்குநா் (பொ) உஷா நடேசன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனா்.

மாலை 4 மணிக்கு வடமட்டம் சாலையில் அமைந்திருக்கும் என்பி இண்டா்நேஷனல் பள்ளி 5-ஆம் ஆண்டு விழாவிலும் துணை நிலை ஆளுநா் பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com