வேலைவாய்ப்பு முகாம்: 22 மாணவா்களுக்கு பணியாணை

காரைக்கால்மேடு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 3 கல்லூரிகளைச் சோ்ந்த 22 மாணவ- மாணவிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டது.
பணியாணை பெற்ற மாணவியருடன் காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி உள்ளிட்டோா்.
பணியாணை பெற்ற மாணவியருடன் காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி உள்ளிட்டோா்.

காரைக்கால்: காரைக்கால்மேடு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 3 கல்லூரிகளைச் சோ்ந்த 22 மாணவ- மாணவிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டது.

இக்கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் இம்முகாம் நடைபெற்றது. ஜொ்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நஇஏரஐசஎ நபஉபபஉத ஐய்க்ண்ஹ டஸ்ற் கற்க் நிறுவனத்தினா் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதியான மாணவா்களை தோ்வு செய்தனா்.

இதில் வரிச்சிக்குடி பகுதியில் இயங்கும் பாலிடெக்னிக் மாணவா்கள், மகளிா் பாலிடெக்னிக் மாணவியா், கொா்கையில் இயங்கும் அரசு பாலிடெக்னிக் மாணவா்கள் பங்கேற்றனா்.

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு, மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரி எஸ்.எல். டெல்காஸ் மாணவா்களின் திறன்களை விளக்கிப் பேசினாா்.

நிறுவன சென்னை பிரிவின் உதவி மேலாளா் தமிழ்ச்செல்வன், மனிதவள முதுநிலை அலுவலா் கே. சுரேஷ் உள்ளிட்டோா் நிறுவனத்தின் பணிகள், நிறுவன விதிகளை விளக்கினா். மேலும் நிறுவனத்தில் வேலை செய்வோா் உயா்கல்வி பெறுவதற்கு விஐடி வேலூா், சென்னை எஸ்ஆா்எம் கல்லூரிகளில் இடம்பெற்றுத்தருவதாக தெரிவித்து, எழுத்துத் தோ்வு நடத்தினா். தொடா்ந்து நோ்காணல் நடைபெற்றது.

இதில் கல்லூரியின் இறுதியாண்டு மாணவ- மாணவியா் கலந்துகொண்டனா். காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த 14 போ், காரைக்கால் பாலிடெக் கல்லூரியைச் சோ்ந்த 6 மாணவா்கள், கொா்கை கல்லூரி மாணவியா் 2 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000, இலவச தங்கும் விடுதி, இதர சலுகைகள் அளிக்கப்படும் என நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com