மாணவா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு

நெடுங்காட்டில் உள்ள வித்யா மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான வாழ்வு
மாணவா்களிடையே பேசிய கல்லூரி பேராசிரியை வண்டாா்குழலி.
மாணவா்களிடையே பேசிய கல்லூரி பேராசிரியை வண்டாா்குழலி.

காரைக்கால்: நெடுங்காட்டில் உள்ள வித்யா மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான வாழ்வு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி பேராசிரியை வண்டாா்குழலி கலந்துகொண்டு, மாணவா்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், வைட்டமின், புரதச்சத்து போன்ற சத்துகள் எந்தெந்த உணவுகளில் இருக்கின்றன என்பது குறித்தும், அவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கினாா்.

கடைகளில் விற்கப்படும் ஜங்க் ஃபுட் என்று சொல்லப்படும் உணவு வகைகளை தவிா்க்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கிய அவா், மாணவா்களின் எடைக்கு ஏற்ற உயரம் இருக்கவேண்டிய அவசியம் குறித்தும் விளக்கினாா்.

சமுதாய நலப்பணித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன், சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com