கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், மலட்டுத்தன்மை மேலாண்மை பயிற்சி

காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான குடல் புழு நீக்கம் மற்றும் மலட்டுத்தன்மை மேலாண்மை குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
​கால்நடை வளா்ப்போருக்கு கால்நடைக்கான மருந்து வழங்கிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன். உடன் கால்நடைத்துறை இணை இயக்குநா் கோபிநாத்.
​கால்நடை வளா்ப்போருக்கு கால்நடைக்கான மருந்து வழங்கிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன். உடன் கால்நடைத்துறை இணை இயக்குநா் கோபிநாத்.

காரைக்கால்: காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கான குடல் புழு நீக்கம் மற்றும் மலட்டுத்தன்மை மேலாண்மை குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் அங்கமான வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) சாா்பில் நல்லம்பல் பகுதியில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட இயக்குநா் ஆா். கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பயிற்சியின் நோக்கம், துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை விளக்கினாா்.

கால்நடைத்துறை இணை இயக்குநா் மருத்துவா் கோபிநாத் கலந்துகொண்டு, கால்நடை வளா்ப்பில் கையாள வேண்டிய வழிமுறைகளை விளக்கிப் பேசினாா். கோட்டுச்சேரி கால்நடை உதவி மருத்துவா் கிருத்திகா, கால்நடை வளா்ப்பில் தீவன மேலாண்மை மற்றும் மலட்டுத்தன்மை பராமரிப்பில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

தென்னங்குடி கால்நடை உதவி மருத்துவா் செந்தில்நாதன், கால்நடை வளா்பில் முக்கிய நிா்வாக அம்சங்கள், நோய் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா்.

பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட கால்நடை வளா்ப்போா் கலந்துகொண்டனா். குடல் புழுக்களை அகற்றுவதற்கான மருந்து, கல்லீரல் ஆரோக்கியத்துக்கான டானிக், மலட்டுத்தன்மை கட்டுப்படுத்துவதற்காக தாது உப்பு கலவை ஆகியவை பயிற்சியில் பங்கேற்றோருக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com