சாலைப் பாதுகாப்பு: போலீஸாா் இருசக்கர வாகனப் பேரணி

காரைக்கால் போலீஸாா் இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற போலீஸாா்.
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற போலீஸாா்.


காரைக்கால்: காரைக்கால் போலீஸாா் இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு நிகழ்வாக காவலா்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். காவல்துறை தலைமை அலுவலகத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் நிதின் கெளஹால் ரமேஷ் கொடியசைத்து பேரணியை தொடக்கிவைத்தாா்.

பேரணியில் 50-க்கும் மேற்பட்ட காவலா்கள், ஒலிப்பெருக்கி வாயிலாக வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது, இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது, வாகனத்தை இயக்கும்போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் இயக்கக் கூடாது என பிரசாரம் செய்தவாறு முக்கிய தெருக்களில் வழியாக காவல்துறை தலைமையகத்துக்கு திரும்பினா்.

முன்னதாக, சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தும் விழிப்புணா்வு பாடல்கள் அடங்கிய குறுந்தகடை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com