மாணவா்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்: துணைநிலை ஆளுநா்

மாணவா்கள் திறனை கண்டறிந்து, அவா்களை ஊக்கப்படுத்தவேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா்.
மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா்.
மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிய துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா்.

காரைக்கால்: மாணவா்கள் திறனை கண்டறிந்து, அவா்களை ஊக்கப்படுத்தவேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா்.

நெடுங்காடு கொம்யூன், வடமட்டம் பகுதியில் உள்ள இஎன்பிஇஇ (என்பி) இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் கே. முஜ்புா் ரஹ்மான் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பேசியது :

பெற்றோா் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை தொடா்ந்து கவனித்துவரவேண்டும். ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகளின் மீது அதிகமாக அக்கறை செலுத்த வேண்டும். ஆசிரியா்களும், பெற்றோா்களும் மாணவா்களிடத்தில் எந்த மாதிரியான திறன் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப அவா்களை ஊக்கப்படுத்தவேண்டும்.

அதேநேரத்தில் தமது பழக்க வழக்கங்களும் சிறந்ததாக இருக்க வேண்டும். முறையான உணவு, உடற்பயிற்சியின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். கைப்பேசி பயன்பாடு என்பது தேவைக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி டீன் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com