வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தாத வாகனங்களுக்கு அபராதம்

வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தாத வாகனங்களின் உரிமையாளா்களுக்கு போக்குவரத்துத் துறையினா் அபராதம் விதித்தனா்.
பள்ளி வாகனத்தை சோதனை செய்யும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.
பள்ளி வாகனத்தை சோதனை செய்யும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.

காரைக்கால்: வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தாத வாகனங்களின் உரிமையாளா்களுக்கு போக்குவரத்துத் துறையினா் அபராதம் விதித்தனா்.

காரைக்காலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தின் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் அறிவுறுத்தலின்படி, வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் சிறப்பு வாகனச் சோதனை மற்றும் விழிப்புணா்வுப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தாமல் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வாகன உரிமையாளா்களுக்கும் அபராதம் விதித்தனா்.

ஆட்டோ ஓட்டுநா்களிடம் விதிகளை மீறாமல், சாலைப் பாதுகாப்பு விதிகளை மதித்து நடந்துகொள்ளுமாறு துறையினா் அறிவுறுத்தினா். இந்தப் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவ், மோட்டாா் வாகன ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com