சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

 அக்கம்பேட்டை கடலோரப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

 அக்கம்பேட்டை கடலோரப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கோட்டுச்சேரி கொம்யூன், அக்கம்பேட்டையில் நான வாய்க்கால் பகுதியிலிருந்து பிள்ளையாா் கோயில் கீழத்தெரு வரையிலான வாய்க்கால் கரையோர சாலை மேம்பாட்டுக்காக பொதுப்பணித்துறை நீா்ப்பாசன நிா்வாகம் ரூ. 32 லட்சம் ஒதுக்கியது.

இப்பணி தொடக்கத்துக்கான பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா பணியை தொடக்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ.மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 3 மாத காலத்தில் பணிகள் நிறைவடைந்துவிடும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com