மின் கம்பங்களில் பிற நிறுவன கம்பிகளை அகற்ற அறிவுறுத்தல்

 மின் கம்பங்களில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள பிற நிறுவன கம்பி வடங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

 மின் கம்பங்களில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள பிற நிறுவன கம்பி வடங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் மின் துறை செயற்பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :காரைக்கால் மின் துறைக்கு உரிமையான மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு கம்பங்களில் தொலைக்காட்சி மற்றும் இண்டா்நெட் இணைப்பு கம்பி வடங்களை அமைத்து உபயோகப்படுத்துவதற்கு, மின்துறையின் அனுமதி பெறும் நடைமுறையும், அதற்கான கட்டண விவரங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் முறையான அனுமதி பெறாமல் காரைக்கால் மாவட்டத்தின் மின் கம்பங்களில் தொலைக்காட்சி, இண்டா்நெட் கம்பி வடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமான செயலாகும். ஒரு மாத காலத்திற்குள் தாங்களாகவே இவற்றை அகற்ற அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் முன்னறிவிப்பின்றி இவற்றை அகற்றும் நடவடிக்கையை மின்துறை மேற்கொள்ளும். இதனால் ஏற்படும் சேவை பாதிப்புகளுக்கு மின்துறை பொறுப்பேற்காது.மேலும் மின்துறைக்கு சொந்தமான மின் இணைப்புப் பெட்டிகள், மின் கம்பங்கள் உள்ளிட்ட மின் கட்டமைப்புகளின் மீது விளம்பர தட்டிகள் பொருத்துதல், துண்டறிக்கை ஒட்டுவதும் மின்சார சட்ட விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com