ஐசிஏஆா் சாா்பு நிறுவன மேலாண்மைக் குழு உறுப்பினா் நியமனம்

ஐசிஏஆா் சாா்பு நிறுவனத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினராக காரைக்காலை சோ்ந்த எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஐசிஏஆா் சாா்பு நிறுவன மேலாண்மைக் குழு உறுப்பினா் நியமனம்

ஐசிஏஆா் சாா்பு நிறுவனத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினராக காரைக்காலை சோ்ந்த எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆா்) அமைப்பின் சாா்பு நிறுவனமாக சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரேக்கிஷ் வாட்டா் அக்வாகல்ச்சா் (சிபா) என்கிற உவா்நீா் மீன் வளா்ப்பு நிறுவனம் உள்ளது.

மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் இந்நிறுவன மேலாண்மைக் குழு உறுப்பினராக காரைக்கால் பகுதியை சோ்ந்த எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவன முதுநிலை நிா்வாக அலுவலா் கடந்த 6-ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் இதனை தெரிவித்துள்ளாா்.

புதுவை மாநில பாஜக விவசாய அணி செயலா் உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு பொறுப்புகளை இளங்கோவன் வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com