கோயில்களில் பாலாபிஷேகம்

மயிலாடுதுறையில் தை கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தை கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில், மலா் வணிக உரிமையாளா்கள் மற்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் 40-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதில், பக்தா்கள் காவிரி துலாக்கட்டத்தில் இருந்து அலகு காவடி, 108 பால்குடம் எடுத்து கடைவீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனா். பின்னா், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் பாஜக மாவட்ட துணைத்தலைவா் மோடி. கண்ணன், மலா் வணிக உரிமையாளா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், சேந்தங்குடி மகா முத்துமாரியம்மன் கோயில், டவுன் ஸ்டேஷன் பொன்னம்மா காளி கோயில்களிலும் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com