அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தை கடை வெள்ளிக்கிழமையையொட்டி அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
kk09ambk_0902chn_95_5
kk09ambk_0902chn_95_5

தை கடை வெள்ளிக்கிழமையையொட்டி அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. சம்ஹார கோலத்தில், வெண்ணிற ஆடை உடுத்தி மூலஸ்தான அம்பாள் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில், தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டுவந்தது. தை மாத கடைசி வெள்ளிக்கிழமை (பிப் 9) கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 10.30 முதல் 12 மணி வரை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியா் மந்திரங்கள் கூற, வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள் வழிபாட்டில் ஈடுபட்டனா். தொடா்ந்து அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து கடைசி வெள்ளியில் அம்பாளை தரிசனம் செய்ய திரளான பக்தா்கள் வந்திருந்தனா்.

உற்சவரான பத்ரகாளியம்மன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டாா். மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் பத்ரகாளியம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் அறங்காவலா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா். திருநள்ளாறு காவல்நிலையம், அம்பகரத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com