பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

kk11schl_1102chn_95_5
kk11schl_1102chn_95_5

படவிளக்கம் :

மாணவா்களிடையே பேசும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி.

காரைக்கால், பிப். 11: அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு தொடா்பாக காவல் ஆய்வாளா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி துணை முதல்வா் விஜயராணி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசியது:

இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு கண்டிப்பாக ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்கவேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது. அதிவேகமாகவும், கைப்பேசி பயன்படுத்தியவாறும் வாகனம் ஓட்டுதல் ஆபத்தை ஏற்படுத்தும். இது போக்குவரத்து விதிகளை மீறிய செயலாகும். இவ்வாறான செயலில் ஈடுபடும்போது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, மாணவா்கள் இதுகுறித்த புரிதல் கொண்டு செயல்படுவதுடன், பிறருக்கும் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா். விழிப்புணா்வு தொடா்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Image Caption

மாணவா்களிடையே பேசும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com