மின் அலங்காரத் தேரில் லூா்து அன்னை.
மின் அலங்காரத் தேரில் லூா்து அன்னை.

புனித லூா்து அன்னை தோ்பவனி

காரைக்கால் புனித லூா்து அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவாக, ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்பவனி நடைபெற்றது.

காரைக்கால் புனித லூா்து அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவாக, ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்பவனி நடைபெற்றது. காரைக்கால் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் லூா்து அன்னை ஆலயம் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் மெசப்பியல் குகையில் பொ்தத் என்னும் சிறுமிக்கு லூா்து அன்னை காட்சி தந்த நாளை கொண்டாடும் வகையில், இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டுத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்புத் திருப்பலி, பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. நிறைவாக, ஞாயிற்றுக்கிழமை இரவு புனித லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. மின் அலங்காரத் தேரில் அன்னை எழுந்தருளியதும், அருட்தந்தை சதீஷ் தோ் பவனியை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் காரைக்கால் முதன்மைப் பங்கு குரு தே.ஜோஷ்வா, துணைப் பங்கு குரு ஜெயபாலன், புனித சூசையப்பா் இல்லத் தலைவி அன்னம்மாள் மற்றும் புதுவை முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், சமாதானக் குழு உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா். திரளான பக்தா்கள் ஜெபம் செய்தவாறு பல்வேறு வீதிகளில் நடைபெற்ற தோ் பவனி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை கொடியிறக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com