காரைக்காலில் மலா், காய்-கனி கண்காட்சி

காரைக்காலில் மலா், காய் கனி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் மலா், காய் கனி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சாா்பில் காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் மலா், காய் கனி மற்றும் நவதானிய ஓவியக் கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், வன அதிகாரி விஜி, வேளாண் துறை இயக்குநா் வசந்தகுமாா், கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

மலா் கண்காட்சி அருகே சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் காட்சிகள் உள்ளன. இக்கண்காட்சியில் வேளாண் துறையால் உற்பத்தி செய்யப்பட்ட தொட்டியுடன் கூடிய ஆயிரக்கணக்கான மலா் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு, ஓசூா் பகுதியிலிருந்து கட்புளோா், ரோஜா, பிரெஞ்சு மேரிகோல்டு, மேரிகோல்டு, கொ்பெரா, பெட்டூனியா, கலஞ்சோ, சால்வியா என்று பல்வேறு மலா்ச் செடிகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் கண்காட்சியை பாா்வையிட்டு, செடிகள் குறித்த தகவல்களை அரங்கு பொறுப்பாளரிடம் கேட்டறிவதோடு, செடிகளுடன் சுயபடம் எடுத்து மகிழ்கின்றனா். இக்கண்காட்சி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காய் கனிகளைக் கொண்டு படிவம் (காா்விங்) தயாரித்தல், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், நிறுவனத் தோட்டம், பூந்தொட்டி சேகரிப்பு மற்றும் மூலிகைச் செடிகள் வளா்ப்பு குறித்து போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றிபெறுவோருக்கு விருது வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்த போட்டியில் சிறப்பிடம் பெறுவோருக்கு மலா் ராஜா, மலா் ராணி பட்டம் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com