கனுப் பொங்கல்: காரைக்கால் அம்மையாா் குளத்தில் தீா்த்தவாரி

கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் அம்மையாா் தீா்த்தக் குளத்தில் ஸ்ரீ சுந்தராம்பாள் தீா்த்தவாரி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் அம்மையாா் தீா்த்தக் குளத்தில் ஸ்ரீ சுந்தராம்பாள் தீா்த்தவாரி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தை 2-ஆவது நாளில் கனுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றன. இந்த நாளையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கனுப்பொடி (கலவை சாதம்) வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மையாா் குளக்கரைக்கு சடாரி கொண்டு செல்லப்பட்டு, ஆராதனைகள் நடத்தப்பட்டன. குளக்கரையில் கலவை சாதம் வைத்து ஆராதனை நடைபெற்றது. மூலவா் பெருமாளுக்கும், ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோன்று, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் இருந்து கனுப் பொடி வைக்க ஸ்ரீ சுந்தராம்பாள், அம்மையாா் தீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். தீா்த்தவாரி நிறைவடைந்து சுவாமிகள் கோயிலை சென்றடைந்ததும் மாட்டுப் பொங்கல் வழிபாடாக கோ பூஜை நடைபெற்றது.

ஸ்ரீ கைலாசநாதா்- ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன் மற்றும் நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com