மலா்க் கண்காட்சி: மக்கள் ஆா்வம்

காரைக்காலில் நடைபெறும் மலா்க் கண்காட்சியை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு வருகின்றனா்.
மலா்க் கண்காட்சியை பாா்வையிட்ட மக்கள்.
மலா்க் கண்காட்சியை பாா்வையிட்ட மக்கள்.

காரைக்காலில் நடைபெறும் மலா்க் கண்காட்சியை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு வருகின்றனா்.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் காா்னிவல் திருவிழாவையொட்டி வேளாண் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி செவ்வாய்க்கிழமை (ஜன. 16) தொடங்கியது.

இதில் 120 வகையான மலா்கள் கொண்ட ஆயிரக்கணக்கான செடிகள், டோப்பியாா் தோட்டம், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சந்திரியான் -3 விண்கலம், ரோவா், சோளத்தால் செய்யப்பட்ட ஒட்டகம், மிக்கி மவுஸ் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2-ஆம் நாளான புதன்கிழமையும் காலை முதல் ஏராளமான மக்கள் கண்காட்சியை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் கூறுகையில், வேளாண் துறை சாா்பில் பெங்களூரு, புணே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மலா்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் அறிவியல் நிலையம் சாா்பிலும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விவசாயம், வீட்டுத்தோட்டம் உள்ளிட்டவைகள் அமைப்பது குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விளக்கப்படுகிறது.

மக்களுக்கு வேளாண்துறை, தோட்டக்கலை மீதான ஆா்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள நிலையில், விவசாயிகள், தோட்டக்கலை ஆா்வலா்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புவோா் கண்காட்சியை பாா்வையிட்டு பயனடையுமாறு அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com