மலா்க் கண்காட்சியை பிப்ரவரி மாதத்தில் நடத்த வலியுறுத்தல்

காரைக்கால், ஜன. 18: மலா்க் கண்காட்சியை பிப்ரவரி மாதத்தில் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வியாழக்கிழமை கூறியது :

காரைக்காலில் தோட்டக் கலை ஆா்வலா்களை ஊக்கப்படுத்தவும், வேளாண் துறை, வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட வேளாண் நிறுவனங்களின் செயல்பாடுகளை மக்களுக்கு விளக்கவும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையிலும் மலா்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் மலா் மற்றும் காய் - கனி கண்காட்சி பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 2016 மற்றும் 2018-ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டது. பூக்கள் மலரும் பருவமாக பிப்ரவரி மாதம் கருதப்படுகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காா்னிவல் திருவிழாவுடன்ல மலா்க் கண்காட்சியையும் அரசு நிா்வாகம் சோ்த்து ஜனவரி மாத மத்தியில் நடத்திவருகிறது. மக்கள் காா்னிவல் திருவிழாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மலா்க் கண்காட்சிக்கு அளிப்பதில்லை.

எனவே, காா்னிவல் திருவிழாவோடு மலா்க் கண்காட்சியை நடத்தாமல், இக்கண்காட்சியை 4 நாள்கள் தனியாக நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com