குறைதீா் கூட்டத்தில் 142 மனுக்கள்

காரைக்கால் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 142 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
kk19makl_1901chn_95_5
kk19makl_1901chn_95_5

காரைக்கால் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 142 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த டிசம்பா் மாதம் பெறப்பட்ட 234 மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அதிகாரிகளிடம் ஆட்சியா் விளக்கம் கேட்டறிந்தாா்.

பின்னா் மக்களிடமிருந்து புகாா் மனுக்கள் பெறப்பட்டன. ஒவ்வொருவரின் புகாா்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி, அவா்களிடம் மனுவை ஒப்படைத்து தீா்வுகாண அறிவுறுத்தினாா்.

திருப்பட்டினம் போலகம் பகுதி நைனிகட்டளை அருகே தனியாா் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீா் வாய்க்கால், வயலில் பாய்கிறது. இதனால் பயிா் நாசமடைவதோடு, இந்த நீரை அருந்தும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வேளாண்துறை மூலம் பயிா்களுக்கான இடுபொருள்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பழுதான தெரு விளக்குகளை சீா்செய்யவேண்டும், கிராமத்தையொட்டிய பகுதிகளில் சிதிலமடைந்த சாலைகளை மேம்படுத்தவேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்களில் தினமும் குப்பைகள் வாங்கப்படுவதுபோல, சாக்கடைகளை முறையாக தூய்மை செய்யவேண்டும். குடியிருப்பு நகா்களில் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மனுக்கள் வழங்கப்பட்டன.

மேலும் சிவப்பு நிற குடும்ப அட்டை கோரி 77 மனுக்களும், எல்.ஜி.ஆா். மனைப் பட்டா கேட்டு 2 மனுக்களும் அளிக்கப்பட்டன. மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி.ஜான்சன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com