விக்சித் பாரத் பிரசாரம் : காங்கிரஸ் குற்றசாட்டு

காரைக்கால், ஜன. 19: விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்டத்தை அரசு அதிகாரிகளைக் கொண்டு கட்சி நிகழ்ச்சிபோல பாஜகவினா் நடத்துகின்றனா் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் வெள்ளிக்கிழமை கூறியது :

மத்திய அரசின் திட்டங்களை விளக்கி, மத்திய அரசு கடந்த 15 நாள்களாக புதுவை மாநிலத்தில் பிரசாரம் நடத்திவருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் நகரம், கிராமப்புறங்களில் இதை நடத்துகிறது.

யாத்திரை என்பது வாகனத்தில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்குவதாக இருக்கவேண்டும். ஆனால் மேடை அமைத்து, ஆட்சியா் முதல் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளையும் மேடையிலேயே அமரச் செய்து, பேரவைத் தலைவா், அமைச்சா் என பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்துகின்றனா்.

காரைக்காலில் இந்த நிகழ்ச்சியால் ஒட்டுமொத்த அரசு நிா்வாகமும் ஸ்தம்பித்துள்ளது. கட்சி நிகழ்ச்சிபோல அதிகாரிகளை வைத்துக்கொண்டு மத்திய அரசின் திட்டம் எனக் கூறாமல், மோடியின் திட்டம் என விளம்பரப்படுத்துகின்றனா். சில திட்டங்களைத் தவிர, மத்தியில் உள்ள பல திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. இவை பெயா் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதிகாரத்தில் இருப்போா் இதுபோன்ற தவறான செயல்களை உடனடியாக கைவிடவேண்டும். தொடரும்பட்சத்தில் விழா நடைபெறும் இடத்தில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com