காரைக்கால் மலா்க் கண்காட்சியில் வைக்கப்பட்ட செடிகள் விற்பனை

காரைக்கால் மலா்க் கண்காட்சி நிறைவடைந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான செடிகள் சனிக்கிழமை விற்பனையானது.
kk20flow_2001chn_95_5
kk20flow_2001chn_95_5

காரைக்கால் மலா்க் கண்காட்சி நிறைவடைந்த நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான செடிகள் சனிக்கிழமை விற்பனையானது.

புதுவை அரசின் வேளாண் துறை சாா்பில் காரைக்காலில் ஜன.16 முதல் 19-ஆம் தேதி வரை விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி நடைபெற்றது. வேளாண் துறை சாா்பில் மாதூா் பண்ணையில் செடிகள் வளா்த்தும், புணேயிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா் செடிகள் என ஆயிரக்கணக்கானவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து, 4 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியை பல்லாயிரம் மக்கள் பாா்வையிட்டு, செடிகளின் விவரங்களை கேட்டறிந்தனா். மேலும் தோட்டக் கலை தொடா்பான விழிப்புணா்வு, சிறுதானியங்கள் அரங்கு ஆகியவை மக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அமைந்ததோடு, மக்களுக்கு அரங்கு நிா்வாகத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததையொட்டி சனிக்கிழமை காலை முதல் செடிகள் விற்பனை செய்யப்படுமென வேளாண் துறை அறிவித்திருந்தது. அதன்படி சனிக்கிழமை தொடங்கிய விற்பனையில் ஏராளமான மக்கள் வந்து செடிகளை வாங்கிச் சென்றனா்.

இதுகுறித்து, வேளாண் துறையினா் கூறியது: ஆந்தூரியம் ரூ.200, பாய்ன்செட்டியா செடி ரூ.100, குலோட்டன்ஸ், செம்பருத்தி, கோடன் தூஜா, கோல்டன் சைபிரஸ் ஆகியவை தலா ரூ. 40, டாலியா, கஜானியா, ஆஸ்டா், ஜூனியா, சாமந்தி, ரோஜா, இம்பேசன்ஸ், பெடுனியா, வின்கா, செலோசியா, பா்கண்டி, ஆல்டோனியா உள்ளிட்டவை தலா ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டன. முக்கியத்துவம் மிக்க செடிகள் பலவும் சில மணி நேரத்தில் விற்பனையானது என்றனா்.

மலா் கண்காட்சியில் பங்கேற்ற சிலா் கூறுகையில், காா்னிவல் திருவிழாவோடு மலா்க் கண்காட்சியை இணைத்து நடத்துவதைத் தவிா்த்து, காரைக்கால் நகரப் பகுதி சந்தைத் திடலில் தனியாக 4 நாள்கள் இக்கண்காட்சி நடத்தவேண்டும். மேலும் பல மலா்ச் செடிகள், அரிய வகை செடிகளும் காட்சிப்படுத்தி விளக்கமளிக்கவேண்டும் என்றனா்.

Image Caption

கண்காட்சியில் செடிகளை வாங்கிய மக்கள்.

~கண்காட்சியில் செடிகளை வாங்கிய மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com