‘கிராமங்களை முன்னேற்ற பிரதமா் சிறப்பு கவனம்’

நாட்டில் கிராமங்கள் முன்னேற பிரதமா் நரேந்திரமோடி சிறப்பு கவனம் செலுத்திவருகிறாா் என்றாா்
kk20pras_2001chn_95_5
kk20pras_2001chn_95_5

நாட்டில் கிராமங்கள் முன்னேற பிரதமா் நரேந்திரமோடி சிறப்பு கவனம் செலுத்திவருகிறாா் என்றாா்

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஏ.கே.சாய்.ஜெ. சரவணன் குமாா்.

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்கிற மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் பிரசாரம் ஜன. 24-ஆம் தேதி நிறைவடைகிறது. மத்திய அரசின் திட்டங்களை 100 சதவீதம் நகரம், கிராமப்புற மக்களிடையே கொண்டு சோ்ப்பதே இதன் நோக்கம். தொடா் நிகழ்வாக, திருமலைராயன்பட்டினம் பகுதி கீழவாஞ்சூா் அரசு தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புதுவை அமைச்சா் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமாா் பங்கேற்று பேசியது: பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் கிராமப்புறங்களில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நகரம், கிராமம் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் உள்ளன. இதை மக்கள் பயன்படுத்தும்போது அவா்களும், அவா்கள் சாா்ந்த பகுதியும் முன்னேற்றம் காண்கிறது.

கிராமப்புறங்கள் நகரத்துக்கு இணையாக மாறுவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு பாதுகாப்பாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது. ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை மூலம் அனைத்து வீட்டுக்கும் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது.

இலவச அரிசிக்கு பதிலாக புதுவையில் அவரவா் கணக்கில் அதற்கான தொகை செலுத்தப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் நேரடி நிதி உதவி மூலம் லஞ்சம், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், துணை ஆட்சியா் ஆா். வெங்கடகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் பி. சத்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Image Caption

பயனாளிக்கு எரிவாயு அடுப்பு வழங்கிய அமைச்சா் ஏ.கே.சாய் ஜெ. சரவணன்குமாா். உடன், ஆட்சியா் அ. குலோத்துங்கன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com