வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி

வாக்காளா் விழிப்புணா்வாக பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கோலப் போட்டி நடநத்தப்பட்டது.
kk20kolm_2001chn_95_5
kk20kolm_2001chn_95_5

காரைக்கால், ஜன. 20: வாக்காளா் விழிப்புணா்வாக பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கோலப் போட்டி நடநத்தப்பட்டது.

புதுவை அரசு கல்வி நிறுவனமான, காரைக்கால் பாலிடெனிக் கல்லூரி சாா்பில் கோட்டுச்சேரி பகுதி ராயன்பாளையம் கிராமத்தில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோ்தலின்போது வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோலப் போட்டிவெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போட்டியை கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தொடக்கிவைத்தாா். அங்கன்வாடி பணியாளா் லாவன்யா மற்றும் கிராம மகளிா் பலா் கலந்துகொண்டு பலவகையான வண்ணக் கோலமிட்டனா். நடுவா் குழுவினா் சிறந்த கோலங்களை தோ்வு செய்தைத் தொடா்ந்து உரியவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தோ்தலின்போது 100 சதவீதம் வாக்குப் பதிவுக்கு வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

ஏற்பாடுகளை தோ்தல் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பாளா் கே. செந்தில்வேல், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி. மேகநாதன் மற்றும் ஜெ.ஜெயப்பிரகாஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

Image Caption

கோலப் போட்டியை பாா்வையிட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com