காரைக்காலில் 3 இடங்களில் மத்திய அரசின் திட்ட விளக்கப் பிரசாரம்

காரைக்காலில் 3 இடங்களில் மத்திய அரசின் திட்ட விளக்கப் பிரசாரம்

காரைக்காலில் 3 இடங்களில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கி பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் 3 இடங்களில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கி பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் காரைக்கால் மாவட்டத்தில் பிரசாரம் ஜன. 2 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காரைக்கால் நகராட்சி வாா்டுகளுக்குட்பட்ட கோத்துக்குளம், அந்தோணியாா் கோயில், மதகடி பகுதி மக்கள் பங்கேற்கும் வகையில் நகராட்சி திருமண மண்டபம், காமராஜா் திடல், சேத்திலால் நகா் அரசு தொடப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) ஆா். வெங்கடகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் பி. சத்யா, நகராட்சி செயற் பொறியாளா் லோகநாதன் மற்றும் துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நகராட்சி சாா்பில் மகளிா் குழுவினருக்கு கடனுதவி, மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து அரங்கு அமைத்து மக்களுக்கு விளக்கி, பயனாளிகளுக்கு அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

திட்டங்கள் தொடா்பாக மாணவ, மாணவிகள் இடையே விநாடி - வினா போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் பயனடைவது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்றோா் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com