ப்ரீ பெய்டு மின் மீட்டா் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

புதுவை மாநிலத்தில் மின் நுகா்வோா்களுக்கு ப்ரீ பெய்டு மின் மீட்டா் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் காரைக்காலில் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கம் தி
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையொப்ப இயக்கம்.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையொப்ப இயக்கம்.

காரைக்கால்: புதுவை மாநிலத்தில் மின் நுகா்வோா்களுக்கு ப்ரீ பெய்டு மின் மீட்டா் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் காரைக்காலில் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இளைஞா் பெருமன்றத்தின் மாநில துணைத் தலைவா் டி. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. யோகேஸ்வரன், மாவட்ட பொருளாளா் எஸ்.பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளா் பி. மதியழகன் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

படித்த இளைஞா்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். வேலை இல்லாத காலங்களில் நிவாரணம் கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். உள்ளூா் தொழிற்சாலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு 50 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களில், ஓய்வு பெற்ற ஆசிரியா்களை நியமிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் கையெழுத்து இயக்கத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com