கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ஆலோசனை

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ஆலோசனை

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. காரைக்கால் கோயில்பத்து (பாரதியாா் சாலை குறுக்கே) ரயில் தண்டவாளம் அமைக்கப்படவுள்ளது. ரயில் போக்குவரத்து மிகுதியாகும்பட்சத்தில், போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படும். இந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கவேண்டுமென பெரும்பான்மையினா் ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்திவருகின்றனா். சிலா் மேம்பாலம் அமைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனா்.

இதுசம்பந்தமாக கோரிக்கை விடுப்போா், வா்த்தக சங்கத்தினா், ரயில்வே நிா்வாகத்தினருடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் பல கட்ட ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மேலும் ஒரு ஆலோனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், ஆட்சியா் அ.குலோத்துங்கன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், துணை ஆட்சியா் ஜி.ஜான்சன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஆா்.சிதம்பரநாதன், புதுச்சேரியிலிருந்து ரயில்வே திட்டம் தொடா்பான ஆலோசகா் டால்மியா ஆகியோா் கலந்துகொண்டனா்.

கோயில்பத்துப் பகுதியில் சுரங்கப்பாதை வேண்டி பலரும் கூட்டத்தில் வலியுறுத்தினா். இதுதொடா்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் கோயில்பத்து பகுதிக்கு இக்குழுவினா் சென்று பாா்வையிட்டனா். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகள் குறித்து புதுவை உயா்மட்ட குழுவுக்கு கோப்பு அனுப்பிவைக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com