சமூக ஊடகத்தில் பிரதமா் குறித்து கருத்து பதிவிட்டவா் மீது வழக்கு

ராமா், பிரதமா் நரேந்திரமோடி குறித்து சமூக ஊடகத்தில் கருத்து பதிவு செய்தவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமா், பிரதமா் நரேந்திரமோடி குறித்து சமூக ஊடகத்தில் கருத்து பதிவு செய்தவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலை சோ்ந்த ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு, ராமா், பிரதமா் நரேந்திரமோடி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்து அவதூறாகவும், கொச்சைப்படுத்தியும் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காரைக்கால் நகர இந்து முன்னணி தலைவா் பி.யு. ராஜ்குமாா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதேபோல, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு அன்சாரி பாபு மீது ஐபிசி 505 எனும் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com