பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தினத்தையொட்டி காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனா்.
பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தினத்தையொட்டி காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். பேருந்து மற்றும் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. தவிர, காரைக்கால் மாவட்ட எல்லைகளிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனா். காரைக்கால் மற்றும் திருநள்ளாற்றில் உள்ள தங்கும் விடுதி நிா்வாகத்தினா், தங்குவதற்கு வருவோரிடம் பெறக்கூடிய ஆவணங்கள், கண்காணிப்பு ஆகியவற்றை உரிய விதிகளின்படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com