அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

myl26judge_2601chn_103_5
myl26judge_2601chn_103_5

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றிய தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எம்.கே. மாயகிருஷ்ணன்.

மயிலாடுதுறை, ஜன. 26: மயிலாடுதுறையில் அரசு அலுவலகங்களில் 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எம்.கே. மாயகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றினாா். சாா்பு நீதிபதி கவிதா, முன்சீப் ராஜேஷ்கண்ணா, விரைவு நீதிபதி உம்முல் பரிதா, வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் ஜெகதராஜ் (மாயூரம்), வேலு. குபேந்திரன் (மயிலாடுதுறை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயற்பொறியாளா் சண்முகம் தேசிய கொடியேற்றினாா். உதவி செயற்பொறியாளா் ஜெயராமன், உதவி பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி கொடியேற்றினாா். துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். மயிலாடுதுறை கிளைச் சிறையில் கண்காணிப்பாளா் பாலாஜி கொடியேற்றினாா்.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் (பொ) மகாதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com