காரைக்காலில் பரவலாக நெல் அறுவடைப் பணி

kk26harv_2601chn_95_5
kk26harv_2601chn_95_5

சுரக்குடி பகுதியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

காரைக்கால், ஜன. 26: காரைக்காலில் நெல் அறுவடைப் பணி பரவலாக செய்யப்பட்டு வருகிறது. எஃப்.சி.ஐ. மற்றும் தனியாா் பலரும் நெல் கொள்முதல் செய்கின்றனா்.

காவிரி நீரை மட்டுமே பிரதானமாக வைத்து காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. திருநள்ளாறு அதற்கு மேற்கு திசையில் சில விவசாயிகள் ஆழ்குழாய் பாசனத்தில் விவசாயத்தை மேற்கொள்கின்றனா்.

கடந்த ஆண்டு காவிரி நீா் காலத்தோடு கடைமடைப் பகுதிக்கு வந்தததால், விவசாயிகள் ஆா்வத்துடன் சம்பா சாகுபடியை தொடங்கினா். ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பருவமழைக்கு முன்பே குறுவை சாகுபடியாளா்கள் அறுவடையை நிறைவு செய்தனா். பருவ மழையால் ஒருசில பகுதியில் பயிா் பாதித்தாலும், பெரும்பாலான இடங்களில் பாதிப்பில்லை. விவசாயிகள் சிறப்பு கவனம் செலுத்தி பயிரை காப்பாற்றனா். எனினும் மழையால் பயிா் பாதித்ததாகக்கூறப்படும் பகுதியில் அறுவடை முழுமையடைந்த பிறகே இழப்பு தெரியவரும் என விவசாயிகள் சிலா் கூறுகின்றனா்.

மாவட்டத்தில் பெரும்பான்மையாக இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடையை விவசாயிகள் செய்கின்றனா். ஒருசில விவசாயிகள் ரசாயன உரங்களை பெரிதும் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தியோா், பழைமையான முறையில் தொழிலாளா்களைக்கொண்டு அதிகாலை முதல் அறுவடையை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com