வாக்குக்கு பணம்: எதிா்ப்பு பிரசாரம்

காரைக்கால், ஜன. 26 : வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்று வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கட்சி, இயங்கங்கள் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலைய வாயிலில் பிரசாரம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக உயா் மட்டக் குழு உறுப்பினா் கே.எஸ். கணபதி சுப்பிரமணியன் தலைமையில், இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க மாநில தலைவா் எஸ்.ஆனந்த்குமாா் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என்கிற தலைப்பில் கருத்துகள் அடங்கிய துண்டு பிரசுரம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றோா் உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு, மக்களிடையே பிரசாரம் செய்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com