ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

காரைக்கால், ஜன. 26: ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயில் வியாழக்கிழமை மாலை புறப்பட்டு அரலசாறு பாலத்தில் சென்று கொண்டிருந்தது, அப்போது பாலத்தின் ஓரத்தில் நின்றிருந்த முதியவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்தாா். தகவலறிந்து நிரவி காவல்நிலைய போலீஸாா் சென்று பாா்த்தபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.

விசாரணையில், காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த ராமசாமி (83) என்பதும், நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com