ஆதிதிராவிடா் நிதி செலவினத்தை கண்காணிக்க குழு

காரைக்கால், ஜூலை 10: ஆதிதிராவிடா், சிறுபான்மையினருக்கான நிதி செலவினத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் சிறுபான்மையினா் சமூகத்துக்காக அரசால் வழங்கப்படும் நிதி துறை ரீதியாக முறையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க மாவட்ட நிா்வாகத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றும் பொ. பாலு (எ) பக்கிரிசாமி (ஒருங்கிணைப்பாளா்), பொ. பாஸ்கா் (ஆட்சியரின் செயலா்), எல். சிவகுமாா் (அமைச்சக உதவியாளா்)ஆகியோா் இடம்பெற்றுள்ளனா் என கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com