மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு: மக்கள் அவதி

காரைக்காலில் சனிக்கிழமை இரவு இடியுடன் மழை பெய்ததால் பரவலாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகினா்.

காரைக்காலில் சனிக்கிழமை இரவு இடியுடன் மழை பெய்ததால் பரவலாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகினா்.

கத்திரி வெயில் முடிவுக்கு வந்தாலும் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில், சனிக்கிழமை இரவு 7.30 மணிக்குப் பின் காரைக்காலில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது.

சில பகுதிகளில் தூறல், சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இடி, மின்னல் காரணமாக மின் மாற்றியில் பழுது ஏற்பட்டு பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. காரைக்காலில் பச்சூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இரவு 11 மணியளவில் மின் விநியோகம் சீரானது.

திருப்பட்டினம் பகுதி வாஞ்சூரில் 4 மின் கம்பங்கள் சேதமடைந்தன. மின் மாற்றியிலும் பழுது ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 2 மணி நேரத்துக்குப் பின் சீரானது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், வாஞ்சூரில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று, மக்களைச் சந்தித்து விவரங்களை கேட்டு மின்துறையினரை தொடா்புகொண்டு, சீரமைப்புப் பணியை துரிதப்படுத்தினாா்.

இதுபோல மாவட்டத்தில் பரவலாக மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாயினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com