மரம் வளா்ப்பில் அனைவரும்
ஆா்வம் காட்ட வேண்டும்: வன அதிகாரி

மரம் வளா்ப்பில் அனைவரும் ஆா்வம் காட்ட வேண்டும்: வன அதிகாரி

காரைக்கால், ஜூன் 6 : மரம் வளா்ப்பில் அனைவரும் ஆா்வம் காட்ட வேண்டுமென காரைக்கால் வன அதிகாரி கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட வனம் மற்றும் வன விலங்குத் துறை மற்றும் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும் இணைந்து உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தினா்.

வன அதிகாரி என். விஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, உலக சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினாா்.

நெகிழிப் பைகளை மக்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும். மாணவா்கள் இதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பொதுமக்களிடம் மாணவா்கள் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும். மாணவா்கள் அனைவரும் தங்களது வீட்டில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். மக்கள் அனைவரும் மரம் வளா்ப்பில் ஆா்வம் கொள்ளவேண்டும் என்றாா்.

முன்னதாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வறட்சியிலிருந்து விடுபடுதல் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவா்ளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. லூரி நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி, மாணவா் மன்ற ஆலோசகா் நாராயணன், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com