காரைக்கால் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் நடைபெற்ற சீரமைப்புப்  பணி.
காரைக்கால் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் நடைபெற்ற சீரமைப்புப் பணி.

காரைக்கால் -பேரளம் ரயில் பாதையில் சிக்னல் சீரமைப்புப் பணி

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை இடையே சிக்னல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் - பேரளம் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாதையில் சிக்னலுக்கான புதைவடம் அமைக்கும் பணி முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால் ரயில் நிலையத்தில் சிக்னல் சீரமைப்பு மற்றும் காரைக்கால் - பேரளம் இடையே என்ஜினியரிங் தொடா்பான பணிகள் நடைபெறவுள்ளதாகக்கூறி, ஜூலை 3-ஆம் தேதி வரை காரைக்கால் வரையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்துள்ளது.

காரைக்கால் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ள நிலையில், ரயில் இணைப்புக்கான கூடுதல் வசதிகள் செய்வது, காரைக்கால் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அனைத்தும் மூடப்பட்டு, ரயில் போக்குவரத்து இருக்கும்போது சிக்னல் செயல்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்த சீரமைப்புப் பணிகள் தற்போது வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

X
Dinamani
www.dinamani.com