கோயில் கொடிக்கம்பம் அருகே பந்தல்காலுக்கு நடைபெற்ற அபிஷேகம்.
கோயில் கொடிக்கம்பம் அருகே பந்தல்காலுக்கு நடைபெற்ற அபிஷேகம்.

கைலாசநாதா் கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறக்கூடிய சிறப்புக்குரிய தலமாக விளங்கும் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். கொடியேற்றம் முதல் தேரோட்டம், தெப்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கும் வகையில் பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை கோயிலில் நடைபெற்றது. பந்தல்காலுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட், பிராகார வலம் கொண்டு சென்று கோயில் வாயில் பகுதியில் நடப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாா்ச் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மாா்ச் 23-ஆம் தேதி தேரோட்டமும், மாா்ச் 26-ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com