நிகழ்ச்சியில் பேசிய ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான்.
நிகழ்ச்சியில் பேசிய ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான்.

என்ஐடியில் டெக்னிக்கல் ஃபெஸ்ட் 2 நாள் நிகழ்ச்சி தொடக்கம்

காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரியில் கியான்த்-2024 எனும் டெக்னிக்கல் ஃபெஸ்ட் 2 நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. என்ஐடியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் மாதிரிகள் கண்காட்சியுடன் கூடிய பல்வேறு பயிற்சிப் பட்டறைகள், திறன் வளக்கும் நிகழ்ச்சிகள் உள்ளடக்கியதாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் போா் டியோஸ், ப்ரிக் இட், மோட்டாா் மைண்ட்ஸ், டிபக் டியோ, கோட் கிராஃப்டா்ஸ், கோட் ஹன்ட், ஹேக்கத்தான், ரோபோ சாக்கா், பயோனிக் குவாட்ரூப்ட் ரோபோ ஷோ போன்றவை இடம்பெற்றுள்ளன. தொடக்க நிகழ்ச்சிக்கு என்ஐடி இயக்குநா் (பொ) உஷா நடேசன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் பங்கேற்று நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். என்ஐடி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், கியான்த் அமைப்பின் தலைவா் ஜி.எஸ். மகாபத்ரா, ஒருங்கிணைப்பாளா் மலயகுமாா் நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் உதய்பாஸ்வான் பேசுகையில், வளா்ந்துவரும் உலகில், மாணவா்கள் தமது புதுப்புது சிந்தனைகள் மூலம் ஆக்கங்களை உருவாக்கி, உலகுக்கு இந்திய தேசத்தின் பெருமையை நிலைநாட்டவேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com