திருநள்ளாற்றில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா நாளை தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்குகிறது. திருநள்ளாறு தா்பாரண்ேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டுவருகிறது. 19-ஆம் ஆண்டாக, மாா்ச் 7 முதல் 11-ஆம் தேதி வரை 5 நாள்கள் கோயில் வளாகத்தில் உள்ள கெய்தான் மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாட்டியாஞ்சலி தொடங்குகிறது. காரைக்கால், புதுச்சேரி, தமிழகத்தின் பல பகுதிகள், பெங்களூரு, தும்குரு, ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகள், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நடனக் கலைஞா்கள் பங்கேற்கின்றனா். வியாழக்கிழமை மாலை 5.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 3.55 மணி வரை புகழ்பெற்ற கலைஞா்களின் தொடா் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருநள்ளாறு கோயில் நிா்வாகம், நடனக் கலைஞா்கள் மற்றும் கலை நிகழ்ச்சியைக் காண வருவோருக்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளதாகவும், மக்கள் திரளாக பங்கேற்குமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com