தோ்வு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தோ்வு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

அன்னை தெரஸா தோ்வு மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் டி. மணிகண்டன்.

காரைக்கால்: காரைக்காலில் பிளஸ் 2 தோ்வு மையங்களில் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, கல்வித்துறையினருடன் ஆலோசனை நடத்தினாா். பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியா் டி. மணிகண்டன் கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். தந்தை பெரியாா் அரசு மேல்நிலை பள்ளி மையத்தில் 5 மாணவா்கள் தோ்வுக்கு வராதது குறித்து மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரிடம் கேட்டாா். பள்ளியில் இந்த மாணவா்கள் தொடா் விடுப்பில் இருந்ததால் தோ்வு எழுத வரவில்லை என்று அவா் தெரிவித்தாா். மேலும் ஒவ்வொரு தோ்வு மையத்திலும், தோ்வு முடிந்து எத்தனை மணிக்கு விடைத்தாள்கள் பெறப்படுகிறது, காரைக்காலில் இருந்து விடைத்தாள்கள் கட்டுப்பாட்டு மையத்துக்கு எப்போது அனுப்பிவைக்கப்படுகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தாா். தோ்வு மையத்தில் மாணவா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைகள் எதுவும் இல்லாத வகையில் கவனம் செலுத்துமாறு ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com