சிகிச்சைப் பிரிவை திறந்துவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் டி. மணிகண்டன்.
சிகிச்சைப் பிரிவை திறந்துவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் டி. மணிகண்டன்.

கூடுதல் படுக்கை வசதிகளுடன் டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவு திறப்பு

அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் டயாலிசிஸ் பிரிவு புதன்கிழமை திறக்கப்பட்டது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு 6 படுக்கைகளுடன் இயங்கிவருகிறது. மாவட்டத்தில் டயாலிசிஸ் செய்துகொள்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயாளிகள் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. டயாலிசிஸ் இயந்திரம், படுக்கை வசதியை அதிகரிக்கவேண்டும் எனும் கோரிக்கை எழுப்பப்பட்டுவந்தது. இந்நிலையில், கூடுதலாக 4 படுக்கைகளுடன் அரசு நிதி ரூ.8 லட்சம் செலவில் 10 போ் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் மையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை ஆட்சியா் டி. மணிகண்டன் திறந்துவைத்து, மையத்தை முறையாக தனியாா் மருத்துவமனைக்கு நிகராக பராமரிக்குமாறும், நோய்களை தடுக்கும் விதத்தில் தகுந்த உடற்பயிற்சி உள்ளிட்டவற்றின் விழிப்புணா்வை நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும் என்றாா். நிகழ்வில் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் சிதம்பரநாதன், மருத்துவ கண்காணிப்பாளா் எஸ். கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பாா்த்திபன் விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com