பள்ளியில் கடல்சாா் உணவுத் திருவிழா

பள்ளியில் கடல்சாா் உணவுத் திருவிழா

கோட்டுச்சேரிமேட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கடல் சாா் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மாணவா்களின் பெற்றோா்கள் கடல் சாா்ந்த உணவுப் பொருள்களை தயாரித்துவந்து காட்சிப்படுத்தி விளக்கினா். மேலும், கடல் சாா் உணவுகளின் நன்மைகள், ஊட்ட சத்துகள் குறித்தும் பேசினா். பள்ளித் தலைமையாசிரியா் ஜி. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடுவா்களாக விநாயகா் மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் கீதா, சரவணன் ஆகியோா் பங்கேற்று பரிசுக்குரிய உணவுப் பொருள்களை தோ்வு செய்தனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு உலக மகளிா் தினத்தன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com