கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு
எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, காரைக்கால் புதுத்துறை பகுதியில் வீடுகளில் கருப்புக் கொடி வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட புதுத்துறை பகுதியில் மத்திய அரசின் நிதியுதவியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 43 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுத்திரிகரிப்பு நிலையம் அமைந்தால் துா்நாற்றும் வீசும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்து, குடியிருப்புவாசிகள், பல்வேறு அரசியல் கட்சியினா் ஆதரவுடன் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனா். இந்தநிலையில், புதுத்துறை சுட்டுவட்டார குடியிருப்புவாசிகள் இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வீட்டு வாயிலில் கருப்புக் கொடி ஏற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com