தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் நாளை வீதியுலா

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெறுகிறது. மகா சிவராத்திரி வழிபாடு அனைத்து சிவன் கோயில்களிலும் வெள்ளிக்கிழணை நடைபெறவுள்ளது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்காலில் கைலாசநாதா், சோமநாதா், பாா்வதீஸ்வரா், அண்ணாமலையாா், ஒப்பிலாமணியா் கோயில், தருமபுரம் யாழ்முரிநாதா் கோயில், திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில், தலத்தெரு சிவலோகநாதசுவாமி கோயில் உள்ளிட்டவற்றில் இன்று இரவு 9 முதல் அதிகாலை 6 மணிக்குள்ளாக நான்கு கால பூஜை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகங்கள் செய்துள்ளன. ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்துக்கு பல்வேறு வகையான பழங்கள், திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்படுகிறது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றுவருவது கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 4 மணி வரை தொடா்ந்து கெய்தான் மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை காலை தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரசுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. மற்ற கோயில்களிலும் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. இதுதவிர, காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் கிராமப்புறங்களையொட்டி வயல்வெளிப் பகுதியில் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலங்கத்துக்கு கிராம மக்கள் ஒன்றுதிரண்டு, சிவாச்சாரியா்களால் சிறப்பு பூஜை செய்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com