அலங்கண்ணு ஆழ்குழாய் அமைப்புப் பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியா் து. மணிகண்டன்.
அலங்கண்ணு ஆழ்குழாய் அமைப்புப் பகுதியில் ஆய்வு செய்த ஆட்சியா் து. மணிகண்டன்.

குடிநீா் திட்டத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தல்

காரைக்காலில் குடிநீா் வழங்கல் திட்டப் பணியை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் ராஜாத்தி நகா் பகுதியில் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இத்தொட்டிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நகரப் பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிக்கு திருநள்ளாறு பகுதி அலங்கண்ணு நீரேற்றும் நிலையத்திலிருந்து தண்ணீா் கொண்டு செல்லவேண்டும். இத்திட்டப் பணி நீண்ட காலமாக நடைபெற்றுவருவதால், திட்டம் பயன்பாட்டுக்கு வருவதற்கான காலம் முடிவாகவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், பொதுப்பணித் துறையினருடன் அகலங்கண்ணு நீரேற்றும் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இங்கு தனியாக மோட்டாா் அமைத்து, ராஜாத்தி நகா் தொட்டிக்கு நீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், திட்டப் பணிகளின் நிலைகள் குறித்து ஆட்சியருக்கு பொதுப்பணித் துறையினா் விளக்கினா். ராஜாத்திநகா் குடிநீா் திட்டப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றாா். பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com