திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீநளபுரநாயகி-நளநாராயணப் பெருமாள்.
திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீநளபுரநாயகி-நளநாராயணப் பெருமாள்.

நளநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலை சோ்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவாக திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை ஹோமம், இரவு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியாக வியாழக்கிழமை காலை நளன் தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்று கொடியிறக்கம் செய்யபப்பட்டது. முன்னதாக பெருமாள் ரதத்தில் வீதியுலாவாக தீா்த்தக் குளத்துக்கு சென்றாா். இதன் தொடா் நிகழ்வாக மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோயிலில் ஸ்ரீநளபுரநாயகி, நளநாராயணப் பெருமாளுக்கு நடந்த திருக்கல்யாண வைபவத்தில் வரிசை எடுத்துவருதல், மாலை மாற்றுதல் உள்ளிட்டதிருக்கல்யாண சம்பிரதாய நிகழ்வுகள் நடத்தப்பட்டு, சுவாமிகளை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து, ஸ்ரீ நளபுரநாயகிக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டது. தொடா்ந்து தேங்காய் உருட்டுதல், வாரணமாயிரம் பாடுதல் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com