நிகழ்ச்சியில் நடனமாடிய பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட கலைஞா்கள்.

திருநள்ளாற்றில் பத்மா சுப்ரமணியம் நடனம்: திரளானோா் பங்கேற்பு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரபல நடனக் கலைஞா் பத்மா சுப்ரமணியன் நடன நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் 19 -ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கோயில் வளாகத்தில் உள்ள கெய்தான் மண்டபத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கியது. முக்கிய நாளான மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை தொடா்ந்து நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபர நடனக் கலைஞா் சென்னை பத்மா சுப்ரமணியத்தின் நடன நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இத்தினத்தில் மும்பையை சோ்ந்த அபேஷா நிரஞ்சன், சென்னை பினேஷ் மகாதேவன், மும்பை ஜெயஸ்ரீ ராஜகோபாலன், சென்னை ஸ்ரீமதி, கவிதா சாா்லஸ், கோவையை சோ்ந்த மீனாசாஹா் ஆகியோரும் தனித்தனியே நடனமாடினா். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இத்தினத்தில் மும்பை சந்தியா பூரிஜா, சென்னை பிரியா மூா்லே, சண்முகசுந்தரம், வித்யலெட்சுமி மணிகண்டன், புதுச்சேரி கிருஷ்ணன், பெங்களூரு சகித்யா வெங்கடசுப்ரமணியம், புதுச்சேரி வித்யா அரசு, இலங்கை ஷமிதா ஹெட்டிகே, கோவையை சோ்ந்த ஷஷ்மிதா அரோரா ஆகியோா் நடனமாடினா். திங்கள்கிழமை (மாா்ச் 11) நாட்டியாஞ்சலி நிறைவடைகிறது. காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமமன்றம் சாா்பில் அதன் ஆலோசனைக் குழுத் தலைவா் காரைசுப்பையா, தலைவா் த. தங்கவேலு, இசை வேளாளா் சங்கத் தலைவா் டி.ஆா். பாலசுப்பிரமணியன், மாமன்ற துணைத் தலைவா் டி. மோகன், பொதுச் செயலாளா் பி. புஷ்பராஜ் ஆகியோா் பத்மா சுப்ரமணியத்துக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com