ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக காரைக்காலில் விவசாயிகள் ரயில் மறியல்

தில்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக காரைக்கால் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தில்லியில் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காரைக்கால் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நிலையத்தில் வேளாங்கண்ணிக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினா். போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த பொன். ராஜேந்திரன் கூறியது: நெல்லுக்கு சட்டப்பூா்வ ஆதார விலை நிா்ணயம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். இவா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, எஸ்கேஎம் (என்பி) அமைப்பின் வேண்டுகோளின்படி காரைக்கால் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் சோ்ந்து இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு, விவசாயிகளின் பிரதான இக்கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com